தூய்மை பணியாளர்களை தாக்கி வாக்கி-டாக்கி பறிப்பு: இளைஞர்கள் 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியைச்சேர்ந்தவர் சிவலிங்கம் (52). இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர்நேற்று முன்தினம் (2-ம் தேதி)அதிகாலை டாக்டர் நடேசன் ரோடு, மசூதி எதிரே பணியிலிருந்த போது, அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களில் ஒருவர் சிவலிங்கம் நிறுத்திவைத்திருந்த பேட்டரி வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்துள்ளார்.

உடனே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிவலிங்கத்திடம் தகராறுசெய்து அவரை தாக்கியுள்ளனர். இதனை கண்ட தூய்மைபணியாளர்களின் மேற்பார்வையாளர் செல்வகணபதி என்பவர்தாக்கிய 2 நபர்களை சத்தம்போட்ட போது, இருவரும்சேர்ந்து செல்வகணபதியையும்தாக்கியுள்ளனர். மேலும் அவரிடமிருந்து வாக்கி டாக்கியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து செல்வகணபதி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து திருவல்லிக்கேணி, ரோட்டரி நகரைச்சேர்ந்த ராஜேஷ் குமார் (28), அவரது நண்பர் வியாசர்பாடி காந்திபுரத்தைச் சேர்ந்த எதிஷ் (22) ஆகியோரை கைது செய்தனர். வாக்கி டாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

மேலும்