சென்னை: மெட்ரோ ரயிலில் சென்ற பெண்ணை செல்போனில் ரகசியமாக படம் பிடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை செல்லும் மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவர் பயணம் செய்தார்.
அவருக்கு எதிரே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். மேலும், அந்த பெண்ணுக்கு தெரியாமல் அவரை அந்த நபர் செல்போனில் ரகசியமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண், என்னை எதற்காக படம் பிடிக்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அப்பெண் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வரும்போது 100 அவசர அழைப்புக்கு போன் செய்து புகாரளித்துள்ளார். இதையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.
பெண்ணை, செல்போனில் படம் பிடித்ததாக பெரம்பூரைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (50) என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
» பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்
» சிறந்த வீரருக்கான Ballon d’Or விருதை வென்றார் ஸ்பெயினின் ரோட்ரி!
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago