கோடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீஸாரின் புலன் விசாரணை தீவிரம்

By செய்திப்பிரிவு

உதகை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீஸார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகினார். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீஸார் ஆஜராகினர்..

குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், இன்டர்போல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது நடந்துவரும் புலன் விசாரணை மற்றும் சாட்சிகளிடம் விசாரித்து வருவது குறித்து நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கின் விசாரணையை நவம்பர் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும்போது, ‘‘வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இன்டர்போல் விசாரணை நடைபெற்று வருகிறது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

14 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்