பைக்கில் ‘லிப்ட்’ கேட்டு சென்றபோது லாரி மோதல்: தூய்மை பணியாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

மதுரை: திருமங்கலத்தில் பைக் மீது லாரி மோதியதில் ‘லிப்ட்’ கேட்டு சென்ற 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவரது மனைவிநாகரத்தினம் (40). இவர் திருமங்கலம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளர். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவருடன் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்தவர் கள்ளிக்குடி அருகிலுள்ள அகத்தாபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி மனைவி ஈஸ்வரி (40). இருவரும் 10 ஆண்டுக்கு மேலாக இங்கு பணிபுரிந்தனர்.

லாரி மோதியது: இந்நிலையில் நேற்று பிற்பகல் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு கற்பகம் நகர் பகுதிக்கு தூய்மைப் பணிக்கு புறப்பட்டனர். விமான நிலையச் சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவரை வழிமறித்து ‘லிப்ட்’ கேட்டு ஏறிச் சென்றனர். ரயில்வே கேட்டை தாண்டி கற்பக நகருக்குச் சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது.

இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய இரு தூய்மைப் பணியாளர்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பைக்கை ஓட்டியவர் காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீஸார், உயிரிழந்த இருவரின் உடல்களை மீ்ட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்