மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு; பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் இடைநீக்கம்: மேலும் ஒரு மாணவர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் மாநிலக்கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

கடந்த 4-ம் தேதி சென்னை மாநிலக் கல்லூரி - பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே சென்டரல் ரயில் நிலையத்தில் நடந்த மோதலில் மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் படுகாயமடைந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சுந்தர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, தாக்குதல் வழக்கு, கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்: மாணவர் சுந்தரின் மரணத்தை தொடர்ந்து மாநிலக் கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. உயிரிழந்த மாணவர் சுந்தருக்கு கல்லூரி வளாகத்தில் அஞ்சலிசெலுத்தி மாநிலக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அக்கல்லூரிக்கு அக்டோபர் 14-ம் தேதிவரைவிடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் உயிரிழந்த மாநிலக்கல்லூரி மாணவர் சுந்தரை தாக்கியதாக கூறப்படும் பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரையும் அக்கல்லூரி நிர்வாகம் நேற்று இடைநீக்கம் செய்தது.

விசாரணைக்கு பிறகு அவர்கள் அனைவரும் கல்லூரியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையே, மாணவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்