சென்னை: கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து கால் டாக்ஸி ஓட்டுநரிடம் நூதன முறையில் பணமோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனர் கோவிந்த ராஜ். இவருக்கு நேற்று சவாரி அழைப்பு ஒன்று வந்தது. வடபழனியில் இருந்து மகாபலிபுரம் செல்ல வேண்டும் எனக் கூறி புக்கிங் செய்த ஆண் பயணி ஒருவர், வாகனம் புறப்பட்ட சிறிது நேரத்தில் டீ குடிக்கலாம் எனக் கூறி வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளார். அப்போது, தன்னிடம் கையில் ரூபாய் நோட்டுகளாக உள்ளன. அதை வைத்துக்கொண்டு ஜி பே மூலம் எனக்கு பணம் அனுப்புங்கள் என ஓட்டுநர் கோவிந்த ராஜிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார். ஓட்டுநர் கோவிந்த ராஜூம், ஜி பே மூலம் அவருக்கு ரூ.7 ஆயிரம் அனுப்பியுள்ளார்.
பணம் அனுப்பிய சில நொடிகளில் டீக்கடையில் நின்ற அந்த நபர் மாயமாகி விட்டார். அப்போது தான், டாக்ஸியில் பயணித்த நபர் தன்னிடம் 7 ஆயிரம் ரூபாய்க்கு கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து தன்னை நூதன முறையில் ஏமாற்றிய விஷயத்தை கால் டாக்ஸி ஓட்டுநர் கோவிந்த ராஜ் உணர்ந்துள்ளார். இது தொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் அவரளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
9 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago