எழும்பூர் வந்தடைந்த சார்மினார் விரைவு ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்திய திரிபுரா இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த சார்மினார் விரைவு ரயிலில், 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்திய திரிபுரா மாநில இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

ரயில்களில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வேபோலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சிவநேசன்தலைமையில் நேற்று காலை 6.30மணிக்கு கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது,ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சார்மினார் விரைவு ரயில்எழும்பூர் நிலையத்துக்கு காலை 7.20 மணிக்கு வந்தது.

இதில் இறங்கிய பயணிகளைக் கண்காணித்தபோது, ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் பேசியபோது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து, அவரது பைகளை சோதித்தபோது, அதில் 10 கிலோ உலர்ந்த கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சம்.

இதையடுத்து, அவரை எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுவிசாரித்தபோது, அந்த நபர், திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள ஜோகேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த சாகர்தாஸ் (22) என்பதும், விஜயவாடாவில் இருந்து கஞ்சாபொட்டலங்களை எடுத்து வந்ததும்,இங்கு விற்பனை செய்ய திட்டமிட்டுஇருந்ததும் தெரியவந்தது.

அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, அவரை கைதுசெய்து, சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

மேலும்