திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தொழில் செய்துவந்த நைஜீரியர் கைது

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தொழில் செய்துவந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகருக்கு பனியன் தொழில் நிமித்தமாக நைஜீரிய நாட்டினர் வந்து செல்வது வழக்கம். இவ்வாறு திருப்பூர் வரும் நைஜீரியர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பதை கண்டறிந்து போலீஸார் கைது செய்து வருகிறார்கள்.

அதன்படி, திருப்பூர் வடக்கு போலீஸார் நேற்றிரவு சூசையாபுரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபரிடம் விசாரித்தனர். அவருடைய பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தபோது அவரிடம் ஆவணங்களுக்கான நகல் மட்டுமே இருந்தது தெரியவந்தது. மேலும், அவர் நாமக்கல்லில் இருந்து தினமும் திருப்பூர் வந்து பனியன் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் நான்சோ( 41) என்ற அவரை வடக்கு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

54 mins ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்