சென்னை | பின்னணி பாடகர் மனோவின் மனைவி புகாரில் 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன்களுக்கும், அவர்களது வீட்டின் அருகே நடந்து சென்ற நபர்களுக்கும் இடையே கடந்த மாதம் 10-ம் தேதி, ஏற்பட்ட தகராறில் இருதரப்பும் தாக்கிக் கொண்டனர்.

இதில், காயமடைந்த கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவன் அளித்த புகாரின் பேரில் பாடகர் மனோவின் வீட்டில் பணிபுரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பாடகர் மனோவின் இரு மகன்கள் ஷகீர் (38), ரபீக்(35) மீது வழக்குப் பதிவு செய்த நிலையில் அவர்கள் முன் ஜாமீன் பெற்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் மனோவின் மனைவி ஜமீலா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தன்னை தாக்கிவிட்டு காரில் இருந்த பணம், நகைகளை எடுத்துச் சென்றதாக தெரிவித்திருந்தார். இந்த புகாரின்படி கிருபாகரன் (20), மதுரவாயலைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதில், சிறுவனை போலீஸார் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்