ஜான்சி: உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தருண் சக்சேனா (42). இவர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஏரியா மேனேஜராக பணியாற்றி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேல் அதிகாரிகள் வேலை சார்ந்துகடும் நெருக்கடி கொடுப்பதால் கடும் மன அழுத்தம் ஏற்பட்டு 45 நாட்களாக தூக்கிமின்றி தவிப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தன் தற்கொலை குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து தருண் சக்சேனா வின் மனைவி மேகா, தன்னுடைய கணவரின் தற்கொலைக்கு, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளே காரணம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் அந்நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் பிரபாகர் மிஸ்ரா மற்றும் தேசிய மேலாளர் வைபவ் சக்சேனா மீது தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அவர் மனைவி அளித்த புகாரில், “மேல் அதிகாரிகள் என்கணவருக்கு எட்ட முடியாத இலக்குகளை நிர்ணயித்து மனரீதியாக சித்தரவை செய்துள்ளனர். கடன்வசூலில் இலக்கை எட்டாவிட்டால் வேலையை விட்டு நீக்கிவிடுவதாக தினமும் மிரட்டி வந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட மன அழுத்தத்தால் என் கணவர் கடந்த 45 நாட்களாக தூங்கவே இல்லை. அவருடைய தற்கொலைக்கு அந்த மேல் அதிகாரிகளே காரணம்.அவர்கள் மீது நடவடிக்க எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
8 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago