சேலம்: சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகள், பேரன் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகேயுள்ள திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சென்னன் (65). தொழிலாளி. இவர், தனது மகள் குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல முடிவு செய்தார். இதற்காக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் மல்லூருக்குச் சென்று, அங்கிருந்து பேருந்தில் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, நேற்று காலை சென்னன், மகள் சுதா (38), பேரன் விஷ்ணு (12) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மல்லூருக்குப் புறப்பட்டார். சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, பருப்பு லோடு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சென்னன், சுதா, விஷ்ணு ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த மல்லூர் போலீஸார் 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக மல்லூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, லாரி ஓட்டுநர் சுந்தர்ராஜன் என்பவரைக் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
8 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago