சிபிஐ அதிகாரி போல் நடித்து வர்த்தமான் குழும தலைவர் ஓஸ்வாலிடம் ரூ.7 கோடி மோசடி

By செய்திப்பிரிவு

லூதியானா: பஞ்சாபை சேர்ந்த பத்ம பூஷன்விருது பெற்ற வர்த்தமான் குழுமத்தின் தலைவர் ஓஸ்வாலை 9 பேர்கொண்ட இணைய மோசடி கும்பல்ஒன்று வீடியோ காலில் அழைத்துள்ளது.

அப்போது ஒருவர் மும்பை சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, இருக்கைக்கு பின்புறம் சிபிஐ லோகோ, போலீஸ் உடை அணிந்து பக்காவாக பேசி ஏமாற்றியுள்ளார். ஓஸ்வாலின் ஆதார் கார்டை பயன்படுத்தி மலேசியாவுக்கு பார்சல் ஒன்று அனுப்பப்பட்டதாகவும், அதில் 58 போலி பாஸ்போர்ட்கள் மற்றும் 16 டெபிட் கார்டுகள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அவரை கைது செய்யச் சொல்லி வாரண்ட் பிறப்பித்துள்ளதாகவும் கூறி அதன் நகலை வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, ஜாமீன் நடவடிக்கைகளுக்காக இரண்டு வங்கி கணக்குகளுக்கு ரூ.7 கோடி அனுப்புமாறு கோரிய அந்த போலி சிபிஐ அதிகாரி அதுவரை ஓஸ்வாலை டிஜிட்டல் காவலில் வைப்பதாகவும் கூறியுள்ளார். இதைக்கேட்டு பயந்து போன ஓஸ்வால் ரூ.7 கோடி அனுப்பிவைத்துள்ளார். பின்னர் இந்தமோசடி குறித்து போலீஸாருக்குதெரியப்படுத்தினார். இதையடுத்துநடத்தப்பட்ட சோதனையில் அட்னுசவுத்ரி மற்றும் ஆனந்த் குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

39 mins ago

க்ரைம்

14 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்