மன்னார் கடற்கரையில் ஒதுங்கிய பீடி இலை மூட்டைகளை கைப்பற்றிய இலங்கை கடற்படை

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கையில் மன்னார் மற்றும் தலைமன்னார் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து மன்னார் வரையிலுமான கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் நிலையில் சில மூட்டைகள் கரை ஒதுங்கி இருப்பதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் கரை ஒதுங்கியிருந்த 16 மூட்டைகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அந்த மூட்டைகளுக்குள் சுமார் 1,318 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில், இந்த பீடி மூட்டைகள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு படகில் கடத்திச் செல்லப்பட்டபோது கடலில் தவறி விழுந்து மிதந்திருக்கலாம் அல்லது கடத்தல்காரர்கள் தப்பிப்பதற்காக கடலியே விட்டு விட்டுச் சென்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மேலும், இதனைக் கடத்தியவர்கள் யார் என்பது குறித்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

8 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்