பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தேடும் தாம்பரம் போலீஸ்

By பெ.ஜேம்ஸ் குமார்

தாம்பரம்: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சீசிங் ராஜா போலீஸாரால் தேடப்பட்டு வரும் நிலையில், செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக மாவட்டம் முழுவதும் சுவரொட்டி ஒட்டி ரவுடி சீசிங் ராஜாவை தேடி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற வழக்கில் சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது புகைப்படத்துடன் கூடிய பொது அறிவிப்பு சுவரொட்டி தாம்பரம் மாநகர காவல் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், கிழக்கு தாம்பரம் ராம கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜா என்கிற சீசிங் ராஜா (49), என்பவர் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கின் குற்றவாளி ஆவார். அந்த வழக்கில் முறைப்படி அழைப்பாணை வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறக்கப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். நீதிமன்றத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற வழக்கில் 2024 ஆகஸ்ட் 20-ம் தேதி ராஜா என்கிற சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை பற்றி தகவல் தெரிந்தால் சேலையூர் காவல் ஆய்வாளர் 98401 25656, காவல் ஆய்வாளர் அலுவலகம் 94981 00157 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும், ரவுடி சீசிங் ராஜாவின் புகைப்படத்துடன் கூடிய பொது அறிவிப்பு சுவரொட்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்