சிவகங்கை அருகே கார் கவிழ்ந்து 2 பொறியாளர்கள் உயிரிழப்பு: வளர்ப்பு நாயும் இறந்தது

By செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 2 மென் பொறியாளர்களுடன் வளர்ப்பு நாயும் உயிரிழந்தது. மேலும் ஒருவர் காயமடைந்தார்.

சிவகங்கை பையூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் (33), கலாநிதி (33), யோகேஸ்வரன் (29). இதில் கார்த்திக் சென்னையிலும், கலாநிதி கோயம்புத்தூரிலும் மென் பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இருவரும் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். இந்நிலையில், இருவரும் யோகேஸ்வரனுடன் காரில்காளையார்கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு சிவகங்கைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கொல்லங்குடி அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்துசாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக், கலாநிதி ஆகியோர் உயிரிழந்தனர். காரில் இருந்த கார்த்திக்கின் வளர்ப்பு நாயும் இறந்தது.

காயமடைந்த யோகேஸ்வரன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காளையார் கோவில்போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

மேலும்