குரோம்பேட்டை: குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியான எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று (செப்.12) மின்னஞ்சல் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர், இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் கல்லூரி வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அத்துடன், தாம்பரம் மாநகர காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். சோதனைக்குப் பின் மிரட்டல் மின்னஞசல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரின் மின்னஞ்சல் முகவரியை வைத்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே இந்தக் கல்லூரிக்கு கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதியும் இதேபோல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக இன்றும் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், பேராசிரியர் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
12 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago