குண்டடம் அருகே டூவீலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் கட்டிடத் தொழிலாளி உட்பட 2 பேர் உயிரிழப்பு 

By எம்.நாகராஜன்

தாராபுரம்: குண்டடம் அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 2 இருசச்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிடத் தொழிலாளி உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

திருப்பூர் மாவட்டம்,குண்டடம் அருகேயுள்ள நிறையூரைச் சேர்ந்தவர் பழனிசாமி, இவரது மகன் செல்வக்குமார் (20), கூலித்தொழிலாளி. நேற்று இரவு (செப்.10) செல்வக்குமார் தனது பைக்கில் குண்டடம் அருகே, நிறையூரிலிருந்து தொட்டியன்துறை செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் எரகாம்பட்டியில் தங்கியிருந்து கோயில் கட்டிட வேலை செய்து வரும் காரைக்குடி, பள்ளத்தூரைச் சேர்ந்த முருகன் (35) என்பவர் தன்னுடன் வேலை செய்யும் முத்துக்கருப்பன் என்பவரை ஏற்றிக் கொண்டு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இரண்டு இருசக்கர வாகனங்களும் கருப்பண்ணன் தோட்டம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் பைக் மற்றும் மொபட்டில் சென்ற 3பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இவர்களில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த செல்வக்குமார் மற்றும் முத்துக்கருப்பணை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு சிசிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் செல்வக்குமார் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முத்துக்கருப்பண் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸார் விசாரணை மேற்பகொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

12 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்