ஹவுரா: மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு லேப் டெக்னீசியன் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஆய்வுக் கூடத்தில் இருந்து அழுது கொண்டே வெளிவந்த சிறுமி விவரத்தை தெரிவித்தார் என சிறுமியின் குடும்பத்தை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லேப் டெக்னீசியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் சனிக்கிழமை அன்று ஹவுரா மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. இதை வெளியில் சொல்லக்கூடாது என அந்த சிறுமியை குற்றவாளி மிரட்டி உள்ளார். பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி கடந்த வாரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள லேப் டெக்னீசியனை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பதவி விலக வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பினர் போராட்டம் மேற்கொண்டனர்.
கடந்த மாதம் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே மாநிலத்தில் சிறுமி ஒருவர் துயருக்கு ஆளாகியுள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago