மனைவியை கொன்று நாடகமாடிய பாதிரியார் வழக்கில் மேலும் 7 பேர் கைது

By செய்திப்பிரிவு

பொன்மார்: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள குணாபா பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் பொன்மார் பகுதியில் அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த ஏப். 28-ம் தேதி மனைவி வைஷாலியை கொலை செய்து விட்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டதாக விமல்ராஜ் நாடகமாடினார். தகவல் அறிந்தவைசாலியின் பெற்றோர், சகோதரர் விஷால்குமார் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று, அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் கொலை வழக்கில் சந்தேகம் உள்ளதாகவும் அதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் வைஷாலியின் தாயார் மேரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிறப்பு விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. மனைவியை கொலை செய்த விமல்ராஜ் பொன்மார் பகுதியில் வசித்து வந்த ஜெபஷீலா (30) என்ற பெண்ணுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்தது தெரியவந்தது.

மேலும், தனது மாமியார் வீடு அமைந்துள்ள மும்பை பகுதியில் தங்கி இருந்தபோது அங்கிருந்த மருந்துக்கடை ஒன்றில் இருந்து போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து இங்குவிற்பனை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. கூரியர் சர்வீஸ் மூலம் மொத்தமாக மாத்திரைகளை வாங்கி வந்து உள்ளூர் நபர்களுடன் இணைந்து இத்தொழிலில் ஈடுபட்டுவந்தபோது வீட்டில் 2,800 மாத்திரைகளை இருப்பு வைத்துள்ளார்.

அப்போது வைஷாலி இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதை போலீஸில் சொல்லி விடுவேன் என்று வைஷாலி தனது கணவரிடம் கூறியதால் பயந்து போனவிமல்ராஜ் இத்தகவலை ஜெபஷீலாவிடம் கூறி உள்ளார்.

இதையடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்து போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் (23), சந்திரசேகர் (19), அரவிந்த் (23), அஜய் (24), நங்கநல்லூரைச் சேர்ந்த மைக்கேல் (33), பொன்மார் மலைத் தெருவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்கிற சங்கர் (44) ஆகியோர் உதவியுடன் வைஷாலியை கொலை செய்து நாடகம் ஆடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து தாழம்பூர் போலீஸார் நேற்று முன் தினம் புதிய வழக்குப் பதிவு செய்து பொன்மார் மலைத் தெருவைச் சேர்ந்த ஜெபஷீலா (30) உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஜெபஷீலாவின் வீட்டிலும், பாதிரியாரின் வீட்டிலும் இருந்து 2,800 போதை மாத்திரைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE