சென்னை: கேரளாவில் இருந்து சென்னை வந்த ரயிலில், பெண் ஐ.டி. ஊழியருக்கு பாலியல் சீண்டல் தொடர்பான வழக்கில், ஐ.டி.ஊழியர் ஒருவர், சென்னையில்நேற்று கைது செய்யப்பட்டுள் ளார். மேலும், இரண்டு பேரைரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர். கடந்த 26-ம் தேதி,கேரளாவில் இருந்து சென்னைநோக்கிவந்த விரைவு ரயிலில் ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் பயணம் செய்தார்.
காட்பாடியை ரயில் கடந்தபோது, அந்த பெண்ணிடம் இருந்த செல்போனை அதே ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் பறித்துக்கொண்டு ஓடி னார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் பயணி,செல்போனைப் பறித்த இளைஞரைப் பிடிக்க பின்னால் ஓடினார்.
அப்போது, மற்றொரு இளைஞரும் இணைந்து அந்தப் பெண்ணை ரயில் கழிவறைக்குள் தள்ளி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, பின்னர் ரயிலில் இருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ரயில்வே போலீஸார், வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து, அந்த இளைஞர்களைத் தேடி வந்த னர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை சென்னையில் நேற்று கைது செய்தனர்.
நாமக்கல்லைச் சேர்ந்தவர்: அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர்கிஷோர்(24) என்பதும், நாமக்கல்லைச் சேர்ந்த அவர், சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
போலீஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மேலும் இருவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago