ராமநாதபுரம் அருகே காரில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே காரில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் இதுதொடர்பாக இருவரைக் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மங்கலம் - காரைக்குடி சாலையில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்குடி நோக்கிச் சென்ற ஒரு காரை (டாடா சுமோ) நிறுத்தி சோதனையிட்டதில் அதில் 14 சாக்குகளில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

காரையும் கடத்தப்பட்ட அரிசியையும் பறிமுதல் செய்த குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள், காரில் இருந்த காரைக்குடியைச் சேர்ந்த அரிசிக் கடை உரிமையாளர் சங்கர் (50), டிரைவர் பெருவழுதி (30) ஆகியோரைக் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

24 mins ago

க்ரைம்

42 mins ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்