மயிலாடுதுறையில் சக மாணவரை தாக்கி வீடியோ வெளியிட்ட மாணவர்கள் 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஐடிஐ-யில் கடந்த 7-ம் தேதி மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு மாணவர்கள் படிக்கும் வகுப்பறைக்கு, மற்றொரு பிரிவில் படிக்கும் மாணவர் வந்துள்ளார். அதை மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் மாணவர் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கு மிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

மறுநாள் ஐடிஐக்கு வந்த மெக் கானிக்கல் பிரிவு மாணவரை, மாயூரநாதர் மேலமடவிளாகம் பகுதிக்கு அழைத்துச் சென்ற மற்றொரு பிரிவு மாணவர்கள், அவரை சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.

மேலும், வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் நண்பர் ஒருவரை தொடர்புகொண்டு, அவரிடம் ‘‘இன்னும் அடிக்கவா?’’ என்று கேட்டு தாக்கியுள்ளனர். இது தொடர்
பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இது சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற் படுத்தியது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 5 மாண
வர்களை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மேலும், மற்றொரு மாண வரைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE