சிவகங்கை: சிவகங்கை தெப்பக்குளத்தில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை இளைஞர்கள் காப்பாற்றினர்.
சிவகங்கை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி தனலெட்சுமி (30). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்த நிலையில், மானாமதுரையில் உள்ள பெற்றோர் வீட்டில் தனது குழந்தையுடன் தனலெட்சுமி வசித்து வருகிறார். குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவர் விரக்தியில் இருந்தார்.
இவர் தனது குழந்தை சிகிச்சைக்காக சிவகங்கை வந்தார். அப்போது திடீரென அங்குள்ள தெப்பக்குளத்தில் தனது மகனுடன் தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த இளைஞர்கள் சிலர் அவரையும், குழந்தையையும் காப்பாற்றி சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தனலெட்சுமிக்கு போலீஸார் ஆலோசனை வழங்கினர். இதனிடையே, பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றிய இளைஞர்களை பலர் பாராட்டி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago