மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் ரூ.800 கோடி போதைப் பொருள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

மும்பை: குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) அதிகாரிகள் கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குஜராத் ஏடிஎஸ் படையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்தனர். மேலும் மியாவ் மியாவ் எனப்படும் 792 கிலோ போதைப் பொருளை (திரவ மெபெட்ரோன்) பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.800 கோடியாகும்.

இந்தப் பறிமுதலும் கைது நடவடிக்கையும் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் ஒரு மைல்கல் ஆகும். சந்தேகத்திற்குரிய நபர்களை ஏடிஎஸ் கண்காணித்து வந்தது. அவர்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE