சென்னை: தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ‘ஹெல்மெட்’ அணியவில்லை என்றால் போக்குவரத்து போலீஸார் ரூ.1000 அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல ‘யூ டியூபர்’ இர்பான் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஹெல்மெட்’ அணியாமலும், நம்பர் பிளேட் இல்லாமலும், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வீடியோவை சென்னை காவல் துறையின் சமூக வலைதள பக்கத்தில் ஒருவர் இணைத்து, ‘இர்பானுக்கு அபராதம் விதிக்கப்படுமா?’ என்று கேள்வி எழுப்பி யிருந்தார்.
இதையடுத்து, ‘ஹெல்மெட்’ அணியாமல், இருசக்கர வாகனத்தை ஓட்டியதால் ரூ.1000-ம், நம்பர் பிளேட் இல்லாததால் ரூ.500-ம் இர்பானுக்கு அடையாறு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பிரசாந்த் ‘ஹெல்மெட்’ அணியாமல், இரு சக்கர வாகனத்தை ஓட்டியபடி பேட்டி அளித்ததால், அவருக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
8 hours ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago