சிவகங்கை: சிவகங்கை அருகே பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய நபர் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீஸார் சுட்டு பிடித்தனர்.
சிவகங்கை அருகே வேளாங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (52). அப்பகுதியில் செங்கல்சூளை நடத்தி வந்த இவர், பாஜககூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். ஜூலை 27-ம் தேதி இரவு அவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்கு பதிந்தனர். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் டோங்கரே பிரவீன்உமேஷ் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டில் மேலப்பிடாவூரில் புவனேஸ்வரன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தசம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி களுக்கு செல்வக்குமார் மறைமுகமாக உதவி செய்து வந்துள்ளார். இந்த முன்விரோதத்தில் கொலை செய்தது தெரியவந்தது.
» ராஜஸ்தானில் உள்ள காதலனை சந்திக்க எல்லை தாண்டிய பாக். பெண்
» இந்திய - சீன எல்லை பிரச்சினையில் எந்த நாடும் தலையிடுவதை விரும்பவில்லை: அமைச்சர் ஜெய்சங்கர்
மேலும் இதுதொடர்பாக மேலப்பிடாவூரைச் சேர்ந்த மருதுபாண்டி (20), சாத்தரசன்கோட்டையைச் சேர்ந்த அருண்குமார் (20), வைரவன்பட்டியைச் சேர்ந்த வசந்த்குமார் (25), சக்தி மில்கேட் பகுதியைச் சேர்ந்த சட்டீஸ்வரன் (21), சிவகங்கை எம்ஜிஆர் காலனியை சேர்ந்த விஷால் (20) ஆகிய 5 பேரைபிடித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
அப்போது அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை புதுப்பட்டி அருகே பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆயுதங்களை எடுப்பதற்காக புதுப்பட்டிக்கு சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளர் மணிகண்டன், உதவி ஆய்வாளர் பிரதாப் ஆகியோர் தலைமையிலான போலீஸார் வசந்த்குமாரை அழைத்துச் சென்றனர்.
வாளால் வெட்டினார்: ஆயுதங்களைக் காட்டி கொண்டிருந்தபோது, வாளால் உதவி ஆய்வாளர் பிரதாப்பை கையில் வெட்டிவிட்டு வசந்த்குமார் தப்பமுயன்றார். இதையடுத்து ஆய்வாளர் மணிகண்டன், அவரை காலில் சுட்டுப் பிடித்தார். காயமடைந்த இருவரையும் சிவகங்கை அரசுமருத்துவமனையில் அனுமதித் தனர்.
பின்னர் வசந்தகுமார் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அவர் மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த உதவி ஆய்வாளர் பிரதாப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago