காஷ்மீரில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளின் வரைபடம் வெளியிட்டது காவல் துறை

By செய்திப்பிரிவு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தோடா மாவட்டத்தில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் கடந்த 16-ம் தேதி நடத்திய தாக்குதலில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களின் உருவபடத்தை ஜம்மு காஷ்மீர் போலீஸார் வெளியிட்டு தலா ரூ.15 லட்சம் பரிசு அறிவித்துள்ளனர். தீவிரவாதிகள் பற்றி தகவல் அளிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள போலீஸார், அதற்கான தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளனர். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் போலீஸார் உறுதியளித்துள்ளனர்.

3 வீரர்கள் காயம்: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடுபகுதியில் மச்சில் வனப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் நேற்று ஈடுபட்டனர். அப்போது ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்