சத்தியமங்கலம் அருகே சாலை விபத்து: கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வேன் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (17), ஆதிசீனிவாசன் (22), ரோஹித் (18) மற்றும் ஈரோடு மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்த தர்மேஷ் (19) ஆகியோர், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், விடுதியில் தங்கிப் பயின்று வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு தாளவாடி அருகேயுள்ள ஆசனூர் செல்லத் திட்டமிட்டனர். இதையடுத்து, கருங்கல் பாளையத்திலிருந்து ஸ்ரீநிவாஸ் அண்ணன் முகில் நிவாஸ் (22) காரில் கல்லூரிக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து 3 கார்களில் 15 மாணவர்கள் ஆசனூருக்குப் புறப்பட்டு உள்ளனர். முகில் நிவாஸ் ஓட்டிச் சென்றகாரில், அவரது தம்பி ஸ்ரீநிவாஸ், நண்பர்கள் தர்மேஷ், ரோஹித், ஆதி சீனிவாசன் ஆகியோர் சென்றுள்ளனர். மற்ற மாணவர்கள் வேறு 2 கார்களில் சென்றுள்ளனர். சத்தியமங்கலத்தை அடுத்த, வடவள்ளி அருகே சென்ற போது, முன்னாள் சென்ற வாகனத்தை முகில் நிவாஸ் முந்திச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது எதிரே தக்காளி லோடு ஏற்றி வந்த வேன் மீது கார் மோதியது. இந்த விபத் தில் முகில் நிவாஸ், தர்மேஷ், ரோஹித் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த ஸ்ரீநிவாஸ், ஆதிசீனிவாசன் ஆகியோர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்