திண்டுக்கல்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டிராஜா(38). ஆட்டோ ஓட்டுனரான இவர், திண்டுக்கல் அருகே அம்பாத்துரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு சிறுமி ஒருவரை கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அம்பாத்துரை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் ராஜாவை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜோதி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சரண், முத்துப்பாண்டிராஜாவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.8000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து முத்துப்பாண்டிராஜாவை போலீஸார் சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago