ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேருக்கு 3 நாள், ஒருவருக்கு 5 நாள் போலீஸ் காவல்

By செய்திப்பிரிவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரதுவீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்துராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக மேலும் 5 பேரை கைது செய்தனர். இதனால், கைது எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் போலீஸாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். பல்வேறு ரவுடிகுழுக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதேபோல், இக்கொலையில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே ஆற்காடு சுரேஷின் தம்பி தலைமையிலான கும்பலே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இக்கொலைக்கு பழி தீர்க்க பாம்சரவணன் எந்நேரத்திலும் முயற்சிக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக் கின்றனர். எனவே, குற்ற வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள பாம் சரவணனை போலீஸார் தேடி வரு கின்றனர்.

மேலும், கொலைக்கான மூல காரணம், மூளையாக செயல்பட்டவர், பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மொத்தகுழுக்கள், அதில் உள்ளவர்கள் எனஅனைத்து தகவல்களையும் முழுமையாக சேகரிக்கும் வகையில் அடுத்தடுத்தநடவடிக்கைகளை போலீஸார் மேற் கொண்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக பொன்னை பாலு, ராமு, அருள், ஹரிகரன் ஆகிய 4 பேரையும் மீண்டும் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் மனு அளித்தனர். இதை ஏற்றுக் கொண்டநீதிபதி ஜெகதீசன் சிறையில் அடைக்கப்பட்ட ஹரிகரனுக்கு மட்டும் 5 நாள் போலீஸ் காவல் வழங்கி, மீதம் உள்ள 3 பேருக்கும் தலா 3 நாள் காவல் வழங்கிஉத்தரவிட்டார். அவர்களின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்க கூடாது. அனைத்துக்கும் விசாரணை அதிகாரியே பொறுப்பு எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

இதையடுத்து, 4 பேரையும் விசாரிப்பதற்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். இதன் முடிவில் பல்வேறு பரபரப்புதகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகபோலீஸார் தெரிவித்தனர். முன்னதாக 4 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்திருந்தனர். நீதிமன்றத்தை சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பொன்னை பாலு, ராமு,அருள் ஆகிய 3 பேரையும் ஏற்கெனவே போலீஸார் 5 நாள் காவலில்விசாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதில் ஹரிகரன், கொலையாளிகளுக்கும், நிதி உதவி அளித்தவர்களுக்கும் இடைத் தரகராக செயல்பட்டவர் என்பதால் கூடுதலாக விசாரிக்க கால அவகாசம் கேட்டிருந்தனர். அதன் அடிப்படையிலேயே அவருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE