வேளாங்கண்ணி அருகே கஞ்சா கடத்திய வழக்கு: ஒன்றிய குழு துணை தலைவர் கைது

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள மேலப்பிடாகையில் கடந்த 4-ம் தேதி 3 கார்களை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டதில், கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் இருந்த திருப்பூர் மாவட்டம் இடுவை பகுதியைச் சேர்ந்த மணிராஜ்(36), புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கவுதமன்(36), விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தட்சிணாமூர்த்தி(41), சிவமூர்த்தி (38) ஆகியோரைக் கைது செய்த போலீஸார், 200 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். அவற்றை ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து, இலங்கைக்கு படகு மூலம் அனுப்ப இருப்பது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், கடத்தல் சம்பவத்தில் அதிமுகவைச் சேர்ந்த, வேதாரண்யம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் அறிவழகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அறிவழகனை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவருக்கு பல்வேறு கடத்தல் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE