டெல்லியில் நோயாளி சுட்டுக் கொலை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி தில்ஷத் கார்டன் பகுதியில் குரு தேஜ் பகதூர் மருத்துவமனை உள்ளது. இதன் 24-வது வார்டில் சிகிச்சை பெற்று வந்த ரியாசுதீன் (32) என்ற நோயாளி கடந்த 14–ம் தேதி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த வாசீம் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டு வந்தவர்கள் தவறுதலாக ரியாசுதீனை கொன்று விட்டதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர். இதுவரை 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், டெல்லி அரசு மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி அவர்களின் பாதுகாப்பிலும் மருத்துவமனை நிர்வாகம் கவனம் செலுத்துவது அவசியமாகும். நோயாளிகளை சந்திக்க மருத்துவமனைக்குள் வருபவர்களை பாதுகாவலர்கள் சோதனை செய்யவேண்டியது அவசியம்" என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

14 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்