சென்னை | இரட்டிப்பு பணம் தருவதாக நூதன மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: இரட்டிப்பு பணம் கொடுப்பதாக கூறி நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி செய்யும் கும்பல் ஒன்று ரூ.10 லட்சம்பணத்துடன் கோயம்பேடு பேருந்து முனையம் பகுதியில் சுற்றித் திரிவதாக சிஎம்பிடி காவல் நிலையபோலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்காவல் நிலைய போலீஸார் அங்குரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.

அப்போது, அங்கு 2 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதித்தபோது அதில் 500 ரூபாய் பண்டல்கள் இருந்தன.

மேலும், அந்த பண்டல்களை பிரித்து பார்த்தபோது அதில் ஒவ்வொரு பண்டலின் மேல் மற்றும் அடி பகுதிகளில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்து இடையில் 500 ரூபாய் நோட்டுகள் போல் வெளிர் பச்சை நிறத்திலான தாள்களை வைத்திருந்தது தெரியவந்தது. ரூ.5 லட்சம் கொடுக்கும் நபர்களிடம், இரட்டிப்பு பணம் என ரூ.10 லட்சமாக கொடுப்பதற்காக இந்த கும்பல் வந்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் பிடிபட்டவர்கள் திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த ஆஷிக் (32), புதுக்கோட்டை மாவட்டம், காமராஜபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல் (52) என்பது தெரியவந்தது.

இருவரும் பல்வேறு நபர்களிடம் ஒரு லட்சம் கொடுத்தால் அதை இரட்டிப்பாக இரண்டு லட்சமாக கொடுப்பதாக நூதன முறையில் மோசடி செய்து வந்ததும் அதற்காக மேல் மற்றும் கீழ் பகுதியில் மட்டும் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டு அதற்கு இடையில் வெளிர் பச்சைநிற தாள்களை வைத்து எடுத்து வந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித் தனர்.

அவர்களிடம் இருந்து 48 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் பச்சை நிற தாள்களைபோலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடை பெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE