சென்னை | குறைந்த வட்டிக்கு அடகு வைத்து தருவதாக நகை பெற்று மோசடி செய்த 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: குறைந்த வட்டிக்கு அடகு வைத்து தருவதாக பொதுமக்கள் பலரிடம் நகை பெற்று மோசடி செய்ததாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ராயபுரம், சஞ்சீவிராயன் தெருவைச் சேர்ந்தவர் கங்கா மலர் (26). இவர் தனது கணவருடன் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் துரைப்பாக்கம், சூளைமா நகர், 2-வது தெருவைச் சேர்ந்த சாருமதி (40) என்பவருக்கும் ஏற்கெனவே அறிமுகம் இருந்துள்ளது.

இந்நிலையில், கங்கா மலரை தொடர்பு கொண்ட சாருமதி, தங்க நகைகளைக் குறைந்த வட்டியில் அடகுவைத்து பணம் தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பியகங்கா மலர் வங்கியில் அடமானம் வைத்திருந்த தனது தங்க நகைகளை மீட்டு கடந்த ஆண்டு ஆக. 21-ம்தேதி சாருமதியிடம் கொடுத்து குறைந்த வட்டிக்குஅடமானம் வைக்கச் சொல்லி பணம் பெற்றுள்ளார்.

கடனுக்கான வட்டியை கங்கா மலர் முறையாகச் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தங்க நகைகளை திருப்பி கேட்டபோது சாருமதி கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த கங்கா மலர் இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, போலீஸார்வழக்குப் பதிந்து விசாரித் தனர். அப்போதுதான் சாருமதி, தனது நண்பர்களுடன் சேர்ந்து குறைந்த வட்டிக்கு தங்க நகைகளை அடகு வைத்து தருவதாகக் கூறிபலரை ஏமாற்றி நகைகளைவாங்கி திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தது தெரிய வந்ததாக போலீஸார்தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த மோசடி வழக்கு தொடர்பாக சாருமதி, உடந்தையாக இருந்த அவரது நண்பர் திருவொற்றியூர் கதிரேசன் (31) ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்