சென்னை: சென்னை விமான நிலையத்தில் 150 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மலேசியாவில் விற்பனை செய்ய கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு பயணிகள் விமானம் நேற்று புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் சுற்றுலா விசாவில் மலேசியா செல்ல வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் கொண்டு வந்திருந்த 2 அட்டைப் பெட்டிகளைத் திறந்து சோதனை செய்தனர். அதில் 150 நட்சத்திர ஆமைகள் இருந்தன. இதையடுத்து, ஆமைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், தடையை மீறி நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்றதற்காக அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், ``ஆந்திர மாநில சதுப்பு நிலப்பகுதிகளில் இருந்து இந்த நட்சத்திர ஆமை தலா ரூ.100 கொடுத்து வாங்கி வருகிறேன். மலேசியாவில் பெரிய வீடுகளில் தொட்டிகளில் மீன் வளர்ப்பது போல், நட்சத்திர ஆமைகளை வளர்க்கின்றனர். மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஓர் ஆமையை ரூ.5 ஆயிரத்துக்கு வாங்குவார்கள்'' என்றார்.
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago