வீடுகளின் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகள் திருட்டு @ விருதுநகர்

By செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகர் தனியார் சிமென்ட் ஆலையில் துணைப் பொது மேலாளராக (தொழில்நுட்பம்) பணியாற்றி வருபவர் ராமச்சந்திரன். இவர் ஆலை வளாகத்தில் உள்ள அலுவலர்கள் குடியிருப்பில் வசிக்கிறார். இவர் குடும்பத்துடன் 2 நாட் களுக்கு முன்பு திருநெல்வேலி சென்றார்.

இதேபோன்று, அதே வளா கத்தில் வசித்து வரும் ஆலையின் துணைப் பொதுமேலாளர் (நிர்வாகம்) பாலமுருகன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் பெங்களூரு சென்றிருந்தார்.

நேற்று காலை இருவரது வீட்டின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்துஅருகில் வசிப்போர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிற்பகலில் வீடு திரும்பிய பாலமுருகன், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவரது வீட்டில் சுமார் 90 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. ராமச்சந்திரன் வீட்டில் எவ்வளவு நகை திருடுபோனது என்பது தெரியவில்லை.

இருவரது வீடுகளிலும் 100 பவுனுக்கு மேல் திருடு போயிருக்கும் என போலீஸார் தெரிவித்தனர். இந்த திருட்டு தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசா ரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

6 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்