சத்தீஸ்கரில் கைதான மாவோயிஸ்ட்கள் 4 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

By செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் கடந்த ஜனவரியில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்குப் பிறகு சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பை சேர்ந்தவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இந்த தொடர்பான வழக்கை என்ஐஏ கடந்த பிப்ரவரியில் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆயது ராம் நுருட்டி, மனோஜ் குமார் ஹிச்சாமி, சுரேஷ் நுருட்டி, புத்தராம் பத்தா ஆகிய 4 பேருக்கு எதிராக ஜகதால்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்திய தண்டனை சட்டம், ஆயுதங்கள் சட்டம், வெடிபொருட்கள் சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் இவர்கள் மீது என்ஐஏ குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.

கடந்த ஜனவரி 16-ம் தேதி கான்கெர் மாவட்டத்தின் சோட் பெத்தியா பகுதியில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் குழு மீது இவர்கள் தாக்குல் நடத்தியதாக என்ஐஏ கூறியுள்ளது. இந்த வழக்கில் என்ஐஏ அதன் விசாரணையை தொடர்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்