மொபைல் எண்களை முறைகேடாக பெற்று பல கோடி மோசடி செய்த கும்பல் கைது

By செய்திப்பிரிவு

நொய்டா: பொது மக்களின் மொபைல் எண்களை முறைகேடாக பெற்று, அதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பில் மோசடியில் ஈடுபட்டு வந்த நொய்டாவைச் சேர்ந்த கும்பலை காவல் துறை கைது செய்துள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த ஆஷிஷ் மற்றும் ஜிதேந்திரா இருவரும் இன்சூரன்ஸ் முகவர்களாக பணிபுரிந்து வந்தவர்கள். இந்நிலையில், ஓரிருஆண்டுகளுக்கு முன்னால், நொய்டாவில் கால் செண்டர் ஒன்றை அவர்கள் ஆரம்பித்தனர். அங்கு பணியுரிய 9 பெண்களை வேலைக்கு எடுத்தனர். இதனிடையே சில இணைய தளங்களிலிருந்து 10 ஆயிரம் பேரின் மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை ரூ.2,500 செலுத்தி வாங்கிஉள்ளனர்.

இந்த எண்களைத் தொடர்பு கொண்டு பொது மக்களிடம் தங்கள் நிறுவனம் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் கடன் உதவி வழங்குவதாக தங்கள் கால் செண்டர் ஊழியர்களை பேசச் செய்து மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

போலீஸ் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக, போலி ஆதார் கார்ட் மூலம் நிறுவனத்துக்கான சிம் கார்டுகளை அவர்கள் வாங்கியுளனர். தவிர, இந்த மோசடி செயல்பாட்டுக்கு தங்கள் வங்கிக்கணக்கைப் பயன்படுத்தினால் மாற்றிக்கொள்வோம் என்ற நிலையில், மோசடிபணத்தை சேமிப்பதற்காக கர்நாடகாவில் உள்ள ஒரு நபரின் வங்கிக் கணக்கைமாதம் ரூ.10,000 -த்துக்கு வாடகைக்குப் பெற்றுள்ளனர். அவர்களது இந்த மோசடிதொடர்பான தகவல் காவல் துறைக்குக் கிடைத்தது. அவர்கள் அலுவலகத்தில் காவல் துறை சோதனை நடத்திய போதுமோசடி தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து கால் செண்டரின் நிறுவனர்கள் ஆஷிஷ் மற்றும் ஜிதேந்திரா ஆகியோரையும் அந்தக் கால் செண்டரில் பணிபுரிந்த 9 பெண்களையும் நொய்டா போலீஸார் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 mins ago

க்ரைம்

8 hours ago

க்ரைம்

8 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

மேலும்