கடலூர்: கடலூரில் பாமக பிரமுகரை வெட்டிய வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இன்று (ஞாயிற்று கிழமை) மதியம் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சங்கர் என்கின்ற சிவசங்கர்(43). கேபிள் டிவி தொழில் நடத்தி வருகிறார். இவர் பாமக பிரமுகர். நேற்று பிற்பகல் வீட்டு வாசலில் அவர் நின்று கொண்டிருந்தபோது பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் இவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
பின்னர் அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சங்கர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்புடைய குற்றவாளிகள் திருப்பாதிரிபுலியூர், எஸ்என் சாவடி, சின்ன பொண்ணு நகரைச் சேர்ந்த முருகன் சதீஷ்(27), எஸ்.என் சாவடி, ஐய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன் (28), கம்மியம்பேட்டை, கெடிலம் நகரை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கெளசிக் (18), கடலூர் மஞ்சக்குப்பம், தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்த முருகன் மகன் முகிலன்(19), கடலூர், செம்மண்டலம், தீபன் நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் ராஜ்கிரண்(34) ஆகிய 5 பேரையும் நேற்று நள்ளிரவில் கைது செய்து தனி இடத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தியது.
இதில் கடலூர் எஸ்என் சாவடியை சேர்ந்த மகலிங்கம் மகன்கள் சிவசங்கர், விஜய்பிரபு ஆகியோருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன், சதீஷ், வெங்கடேசன் ஆகியோருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் சிவங்கரின் தம்பி விஜய்பிரபுவை(35) , சதீஷ் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து கடந்த 29.02.2021ம் தேதி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர்.
இந்த வழங்கில் சிவசங்கர் முக்கிய சாட்சியாக இருப்பதாலும், வழக்கை முன்னின்று நடத்துவதாலும் அவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதனையொடுத்து இன்று மதியம் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago