சேலம்: சேலத்தில் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திமுக பெண் கவுன்சிலர் உள்பட நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சேலம், தாதகாபப்ட்டி காமராஜர் நகரை சேர்ந்த அதிமுக பிரமுகரும், மாநகராட்சி மண்டலக் குழு முன்னாள் தலைவருமான சண்முகத்தை கடந்த 3-ம் தேதி மாரியம்மன் கோயில் தெருவில் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இது சம்பந்தமாக அன்னதானப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸார் விசாரணையில் 55-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமாருக்கும், சண்முகத்துக்கும் இடையே மாரியம்மன் கோயில் டிரஸ்ட்டி தலைவர் பதவி பெறுவதிலும், சாலை ஒப்பந்த பணி எடுப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. மேலும், சதீஸ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது சம்பந்தமாக சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
இதன் காரணமாக சதீஸ்குமார் கூட்டாளிகள் சண்முகத்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் சதீஸ்குமார் உள்பட பத்து பேரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் திமுக பெண் கவுன்சிலர் தனலட்சுமிக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்த போலீஸார் அவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தாதகாப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அஜித், மகேஸ்வரன், தனலட்சுமி ஆகிய நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதிய சட்டத்தின் கீழ் பதியப்பட்ட முதல் கொலை வழக்கு: மத்திய அரசு மூன்று புதிய சட்டத்தை கடந்த 1-ம் தேதி அமல்படுத்தியது. இந்த புதிய சட்டத்தின் கீழ் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு ஐபிசி 302 சட்டப்பிரிவுக்கு மாற்றாக புதிய சட்டப்பிரிவான பிஎன்எஸ்-103 சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
» கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
» ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் | சிசிடிவி காட்சி வெளியாகி வைரல்; போலீஸ் விசாரணை
இந்த சட்டத்தின்படி தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் உட்பிரிவுகள் 103(2) மற்றம் 1,2ல் தண்டனை விவரம் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஆயுள் தண்டனை வழங்கலாம். அதேபோல, ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல் கொலை செய்யும் போது, ஆயுள் தண்டனையும், தூக்கு தண்டனையும் வழங்க சட்ட சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
9 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago