சென்னை: போலீஸாரை மிரட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிஷி கண்ணன். போலீஸாரின் ரவுடி பட்டியலில் உள்ள இவர், வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில், ``போலீஸார் என்னை தேடுவதை விட்டு விடுங்கள். நான் எங்கே இருக்கேன் என உங்களால் கண்டுபிடிக்க முடியாது. இன்று இரவுக்குள் ஒரு கொலை நடக்கும். அதை உங்களால் தடுக்க முடியாது. என்னையும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது'' என போலீஸாரை மிரட்டும் தொனியில் பேசியிருந்தார்.
இதையடுத்து, அவரை பிடிக்க வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சக்திவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், எண்ணூரில் பதுங்கி இருந்த ரிஷி கண்ணனை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
13 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago