தாம்பரம் அருகே பைக் திருடர்களை பிடிக்க முயன்ற இளைஞருக்கு வெட்டு

By செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் அருகே பைக் திருடர்களை நண்பர்களுடன் மடக்கிப் பிடித்தபோது இளைஞரை கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய 3 பேரை தாம்பரம் போலீஸார் தேடி வருகின்றனர்.

தாம்பரம் அருகே இரும்புலியூர், சத்யசாய் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (29), அதே பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் பைக்கை மர்ம நபர்கள் 3 பேர் திருடிச் செல்வதை அறிந்து தன்னுடைய நண்பர்கள் சக்திவேல் (28), அருண்குமார் (29) ஆகியோருடன் பைக்கில் பிரேம்குமார் விரட்டிச் சென்றார்.

ஜிஎஸ்டி சாலையில் இரும்புலியூர் சிக்னல் அருகே கடந்தபோது பைக்கை மடக்கி பிடித்தனர். அப்போது பைக்கை விட்டு கீழே இறங்கிய மர்ம நபர்களில் ஒருவன் கத்தியால் பிரேம்குமாரை வெட்டினார். நண்பர்கள் தடுக்க முயன்றபோது அவர்களையும் வெட்ட முயன்றார். பிறகு, திருடிய பைக்கை அங்கேயே விட்டு விட்டு 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு: தாம்பரம் அரசு மருத்துவமனையில் சக்திவேல் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு 8 தையல் போடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாம்பரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பிய பைக் திருடர்கள் 3 பேரைத் தேடி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்