சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் உளவுத் துறை காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கம் பிஆர்ஓ காவலர் குடியிருப்பில் 3-வது தளத்தில் வசிப்பவர் ஜான் ஆல்பர்ட் (33). இவர், டிஜிபி அலுவலகத்தில் உளவுத் துறை காவல் உதவி ஆய்வாளராக (எஸ்பிசிஐடி) பணி செய்து வந்தார். இவருக்கு ஜென்ஸி என்ற மனைவியும், 2 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை பணிக்கு செல்வதாக புறப்பட்டவர் பின்னர், பணிக்கு செல்லாமல் அவரது அறைக்குள் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை.
அதிர்ச்சி அடைந்த மனைவி ஜென்ஸி, கதவை திறக்க முயன்றார். ஆனால் உள்பக்கமாக பூட்டியிருந்ததால், அவரால் கதவை திறக்க முடியவில்லை. இதையடுத்து அவர் பக்கத்து வீட்டினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஆல்பர்ட் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி ஜென்ஸி கணவரை மீட்டு மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமாரி தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது அவரது தற்கொலைக்கு பணியில் ஏற்பட்ட மன உளச்சல் உட்பட வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
» உதகையில் கொட்டிய கனமழை: வெள்ளத்தில் தத்தளித்த நகரம்
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கொமதேக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு
சார் பதிவாளர் தற்கொலை முயற்சி: சென்னை திருமங்கலத்தில் வசித்து வருபவர் கணேசன் (33). இவர் திருப்போரூரில் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் திங்கள்கிழமை மதியம், அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டு வீட்டில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து திருமங்கலம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
7 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago