திருவண்ணாமலை: போளூர் அருகே மரத்தில் கார்மோதியதில் ஆந்திர மாநில பக்தர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் அடுத்த பெண்குரைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிதர்(39). இவர்,தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருவண்ணாமலைஅண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று காலை காரில் வந்தார். சசிதர் காரை ஓட்டி வந்துள்ளார்.
போளூர் அடுத்த வசூல் கிராமம் அருகே, திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இந்த விபத்தில் கார் உருக்குலைந்தது.
சசிதர் மனைவி கல்யாணி(33), மகள் ரிதிஷா(8) மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ரவி(24) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரை ஓட்டி வந்த சசிதர், அவரது மகன் பின்காராமச்சந்திரன்(11), பெங்களூருவைச் சேர்ந்த துர்கா பிரசாத்மனைவி ஈஸ்வரி(62) ஆகியோர் பலத்த காயமடைந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
» ஜெகன் அரசால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
தகவலறிந்த வந்த போளூர் போலீஸார், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக போளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago