ஜெய்ப்பூர்: அமெரிக்காவைச் சேர்ந்தவர் செரிஸ். இவர் கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் கவுரவ் சோனி என்ற நகைக்கடைக்காரின் தொடர்பு அவருக்கு கிடைத்தது.
கவுரவ் சோனி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஜோரி பஜாரில் கடை வைத்துள்ளார். அவரது கடையில் தங்க மூலம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை ரூ.6 கோடிக்கு செரிஸ் வாங்கினார்.அந்த நகைகளை இவர் அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் காட்சிக்கு வைத்துள்ளார். அப்போதுதான் அந்த நகை போலி நகை என தெரியவந்தது.
இதையடுத்து அவர் இந்தியா திரும்பி கவுரவ் சோனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது குற்றச்சாட்டுகளை கவுரவ் சோனி மறுத்ததால், போலீஸில் செரிஸ் புகார் அளித்தார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தெரிவித்து அவர்களின் உதவியை நாடினார். இந்த மோசடி குறித்து விசாரிக்கும்படி அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஜெய்ப்பூர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
போலீஸார் தேடுவதை அறிந்ததும், கவுரவ் சோனி மற்றும் அவரது தந்தை ராஜேந்திர சோனி ஆகியோர் தலைமறைவாகிவிட்ட னர். அவர்களை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago