ராயபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவு காவலராக பணியாற்றியவர் பிரியங்கா (27). இவர் அதே காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சேகர் (30) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. ராயபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தம்பதியர் வசித்து வந்தனர். பிரியங்கா 3 மாதகர்ப்பிணியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
தொடக்கத்தில் அன்பாக இருந்த இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 31-ம் தேதி மதியம் ஏற்பட்ட சண்டையில் கணவர் சேகர் வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் வரவேற்பறை மின்விசிறியில் பிரியங்கா தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
தகவல் அறிந்த ராயபுரம் போலீஸார் சடலத்தைக்கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்துபோலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரியங்காவின் பெற்றோர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பிரியங்காவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிந்து சேகரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago