சென்னை: சென்னை விமான நிலையம் உட்பட 3 இடங்களுக்கு அடுத்தடுத்துவெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை விமான நிலையம், பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ கட்டிடம், நந்தனம் ஒய்எம்சிஏ வளாகம் என 3 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என அந்தந்த அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதன்நிர்வாகிகள் இதுகுறித்து சென்னைகாவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்களுடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்துசென்று மெட்டல் டிடெக்டர் மற்றும்மோப்ப நாய் உதவியுடன் சோதனைநடத்தினர்.
முடிவில் எந்த வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. இதையடுத்து, புரளியைகிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்து சைபர்க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே சென்னையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது புரளிஎன தெரியவந்தது. எனவே,இதுபோன்ற எந்த மிரட்டல்களையும் யாரும் நம்ப வேண்டாம் என சுட்டிக்காட்டி காவல் ஆணையர் அறிவுரை வழங்கி உள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago