சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் நேற்று மதியம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மேற்குவங்க மாநிலம் நியூஜல்பைகுரியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடைக்கு விரைவு ரயில் வந்தது. அதிலிருந்து இறங்கி வந்தவர்களை கண்காணித்தபோது, இருவர் மீது ரயில்வே போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவர்களை மடக்கி விசாரித்தனர்.
அவர்களின் பைகளை சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ எடைகொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதையடுத்து, அவர்களை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த உமர்அலி(28), ஷரபுதின் சிபிலி (23) என்பதும், விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்து, 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago