சென்னை | மருத்துவரிடம் வெளிநாட்டு கும்பல் ரூ.7 லட்சம் மோசடி: இருவர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: இரட்டிப்பு லாபம் என மருத்துவரிடம் வெளிநாட்டு கும்பல் ரூ.6.98 லட்சம் மோசடி செய்துள்ளது. ரூ.5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு வெளிநாட்டு கும்பலுக்கு உடந்தையாக இருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

மயிலாப்பூரைச் சேர்ந்த 65 வயதுடைய மருத்துவர் ஒருவர் கடந்த 24-ம் தேதி சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘தனது முகநூல் பக்கத்தில் விளம்பரம் ஒன்று வந்தது. அதில், இணையதள முதலீடு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், அறிவுறுத்தப்பட்டிருந்த லிங்க் ஒன்றை திறந்து பார்த்தேன்.

நேரடியாக அது ஒரு வாட்ஸ்அப் குழுவில் சென்றது. பின்னர், அக்குழுவில் உள்ள முக்கிய நபர் ஒருவர் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பு அல்லது அதற்கு மேல் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி முதலில் குறைந்த அளவு பணம் முதலீடு செய்தேன். இரட்டிப்பு பணம் கிடைத்தது. இதை நம்பி படிப்படியாக அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.6.98 லட்சம் அனுப்பினேன்.

அதன்பின் எவ்வித பணமும் திரும்ப கிடைக்கவில்லை. அதன் பிறகே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் பத்மகுமாரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.

முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட மருத்துவர் பணம் அனுப்பிய வங்கி கணக்கை ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் சண்முகம் (32), அவரது கூட்டாளி ஜீவா (26) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மோசடிக்கு மூளையாக செயல்பட்ட வெளிநாட்டு கும்பல் இந்த இருவரது பெயரிலும் கணக்கு தொடங்க வைத்து, அதை அவர்கள் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. மேலும், இதற்காக அந்த கும்பல் தற்போது கைது செய்யப்பட்ட இருவருக்கும் மாதம் தோறும் தலா ரூ.5 ஆயிரம் கொடுத்து வந்ததும் தெரியவந்தது. வெளிநாட்டு கும்பலை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

53 mins ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

மேலும்