சென்னை: சென்னையில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை எர்ணாவூர் பகுதி யைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது மகள், அவரது பாட்டி வீட்டில் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். கடந்த 2014 மே 18 அன்று காசிமேடு பகுதியில் வசிக்கும் 51 வயதான நபர் தனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்லும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, ராயபுரம் அனைத்துமகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜ லட்சுமி முன்பாக நடந்தது. அப்போது அரசு சிறப்பு வழக் கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.
சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு: இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங் காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 7 லட்சத்தை இழப் பீடாக வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தர விட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago